Friday 14 May 2010

உரிய நேரம் வந்து விட்டால் உயிர் போய்விடும்

அண்மையில் என்னை அதிர வைத்த ஒரு சோகச் செய்தி. கார் விபத்தில் ஒருவர் அடைந்த அகால மரணம். மலேசியாவில் ரவாங் என்ற இடத்தில் மிகப் பிரமாண்டமான துர்க்கை அம்மன் கோவில் இருக்கிறது. இதை நிர்மாணித்தவர் கணேசன் என்பவர். இவருடைய பற்றாளர்கள் இவரைக் கணேசனார் என்றே அழைப்பார்கள்.



நல்ல பண்பாளர். சிறந்த சமூக சேவையாளர். தேடி வருகின்ற பக்தர்களின் குறைகளை முன்னுணர்ந்து பரிகாரம் சொல்பவர். இவருக்கும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவர். குடும்பம், மனைவி பிள்ளைகள் என இல்லறத்திலும் நல்லறம் கண்டவர்.

இப்படிப்பட்டவர் தமிழ் நாட்டில் பொள்ளாச்சி அருகே காரில் போய்க் கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தி என்னை உலுக்கி எடுத்து விட்டது. நல்லவர் கெட்டவர் என்பது நமனுக்கு தெரியாது. விழிப்போடு இருந்தாலும் உரிய நேரம் வந்து விட்டால் மாயையின்பால் சிக்கி உயிர் போய்விடும் என்பதற்கு கணேசனாரின் மரணம் உதாரணமாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.  அன்னாரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

"நல்லவர்கள் எல்லாம் சீக்கிரமே சிவலோகம் சென்று விடுகிறார்கள்" என்று அவரின் சீடர்கள் கண்ணீர் விட்டு கதறிய காட்சி இன்னும் மனதைப் பிசைகிறது.

1 comment: