நடிகர் விஜய் தமிழகத்தின் இப்போதைய செல்லப்பிள்ளை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர். ரசிகர்களுக்கு இளைய தளபதி. விஜய் அரசியலுக்கு வரப்போகிறார்...என்ற செய்தி தமிழகத்தில் காட்டுத் தீ மாதிரி பரவியது. ரசிகர்கள் உற்சாகத்தில் கொந்தளித்தனர். வாண வெடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அறிவிப்புக்காக காத்திருந்தனர்.
காத்திருந்து காத்திருந்து கால்கள் வலித்ததுதான் மிச்சம். பார்த்திருந்து பார்த்திருந்து கண்கள் பூத்ததுதான் லாபம். உடைத்தவுடன் பொங்கிய அடங்கும் சோடாவைப் போல அந்த அறிவிப்பு கர்ப்பத்திலே இறந்து போனது.
இப்படி ஆனதற்கு ஆளும் கட்சி திமுக கொடுத்த அழுத்தம்தான் காரணம் என ஒரு தரப்பு கூறியது. இல்லை... இல்லை... எங்கள் தலைவரை ராகுல் காந்தி மதிக்கவில்லை என மற்றொரு தரப்பு மறுத்தது.
எது எப்படியோ விஜய்யின் ஜாதகம் சினிமாவுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். அரசியலுக்கு சாதகமாக இல்லை என்பதே என்னுடைய கருத்து.
முதலில் இவருடைய தனிப்பட்ட குணத்தைப் பார்ப்போம். இவர் மிகவும் அமைதியானவர். விளம்பர வெளிச்சம் இவருக்கு அவ்வளவாக ஒத்து வராது. பொதுமக்களிடம் நெருக்கமாக இருக்க முயற்சி செய்கிறார். ஆனால், முடியவில்லை.
சற்று உற்று நோக்கினால் விஜய் அரசியலுக்கு வருவதில் விஜய்யை விட விஜய்யின் அப்பா சந்திரசேகர்தான் ஆவலாகவும் ஆர்வமாகவும் இருந்தார்...இருக்கிறார்...
திரைப்படத்தில் நடப்பதற்கு கூட தந்தையால் உந்தப்பட்டு வந்தவர்தான் விஜய். தந்தையின் அனுசரணை இல்லாவிட்டால் சினிமாவில் இந்த அளவுக்கு பேர் போட்டிருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
இவர் ஜாதகத்தில் கலைக்கு நாயகனான சுக்கிரன் 11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். நடிப்புகாரகன் செவ்வாய் லக்கனத்தில். விஜய்யின் ராசியும் லக்கனமும் கடகம். இதுவரை ஏழரைச்சனியின் பிடியில் இருந்து இப்போதுதான் விடுபட்டிருக்கிறார்.
வாக்குஸ்தானாதிபதி சூரியன் 12- மறைவு இருந்தாலும் குருபார்வையால் பலம் அடைகிறார். மேலும் 2-ஆம் இடத்தையும் பார்வை செய்கிறார். கடகத்தில் செய்வாய் நீச்சம். ஆட்சி பெற்ற சந்திரனோடு இருப்பதால் நீசபங்கம் அடைந்து ராஜயோகத்தைத் தந்திருக்கிறார்.
குரு எட்டில் மறைந்தாலும் ஆயுள் ஸ்தானத்தை வலுவாக வைத்திருக்கிறார். ஆயுள் ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியுமான சனியையும் 5-ஆம் பார்வையாக பார்க்கிறார்.
இவையல்லாமே புகழ் பெற்ற மக்களை வசியப்படுத்துகின்ற நடிகராக வைத்திருக்க உதவுமே தவிர அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடிக்க ஆதரவாக இருக்காது.
4-ஆம் இடத்ததிபதி ஆட்சி பெற்றிருந்தால் அரசியலுக்கு வரலாம். 1-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் அரசியல் பிரவேசத்திற்கு உதவும். ஆனால், 7-ஆம் இடத்து அதிபதியும் 9-ஆம் இடத்து அதிபதியும் வலுவாக இல்லை.
மேலும் குரு 8-ஆம் இடத்தில் மறைந்திருப்பதும் இவருடைய அரசியல் பிரவேசத்திற்கு பாதகமான நிலையையே ஏற்படுத்தும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சர்ப்பகிரகம் நிற்பது பூர்வபுண்ணிய பலன்களைக் குறைப்பதாக கருதலாம்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்க்கும்போது விஜய் தனிக்கட்சி தொடங்கி அரசியல் பண்ணுவது என்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.
அரசியல் சம்பந்தப்பட்ட சில கிரகங்கள் சாதகமாக இருப்பதால் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நிலையில் மட்டுமே செல்வாக்கோடு இருக்க முடியும்.
தன்னுடைய செல்வாக்கை மற்றவர்களுக்கு தாரைவார்ப்பதைவிட நடிப்புத்துறையில் கிடைத்திருக்கும் அளப்பரிய ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டால் விஜய் இன்னொரு ரஜினியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
Monday, 7 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
venuminna thala pathi( ellamae paathi dhan) comedy ku vadivelu pottiya try pannalam. Ippo dhan vivek puttukittaru illa
ReplyDeletesir please give time of birth ,im searching that all over net . it will be useful for my case study ...
ReplyDeletepraveen.