Friday, 18 December 2009

காலம் மாறும். கவலை தீரும்.

பிரான்சு நாட்டில் வசிக்கும் அன்பர் ஒருவர் என் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி இருந்தார். அந்த தகவலின் சாரத்தை இங்கே தந்திருக்கிறேன்.

vanakam sir
mikavum nandri sir
naan srilanka naadai pirapidamaka kondavan. ippoluthu france (europe) ennum naadil vasikiren. ennakku nalla kalam endu sollukirarkal but appadi nalla kalam ethuvum nadakavillai maaraka thaan nadakirathu.
ennathu yathakathil entha kalam nalla kalam ? enna tholil seiyalam? business sari varuma ? kalyanam entha vayathil eppoluthu ? kadan pirachani thiruma? ennathu ayul matrum health? ennaku politics , cinema sammanthama full intrest irukku ithukal ennaku sari varuma ? appa, amma health ? ennudaya yathakathil  panam sampathikka mudiuma ? aakiyavatrai kanithu kurunkal pls. unkaludaya telephone number kodukka mudiuma thodarpu kolvathatku.....
mikavum rompa rompa nadri sir.


அருமை நண்பர் சுகிதாசுக்கு என்றும் நலமே வளரட்டும்.

" என்ன... என்ன.... வேலைப் பிடித்ததும் என்ன..." என்ற கேபி சுந்தராம்பாள் பாடலைப்போல பல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்.
உங்கள் ஜாதக பலனைச் சொல்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜாதகம் என்பது வழிகாட்டி மட்டுமே. அதோடு உழைப்பும் சேர்ந்தால்தான் உயர்வு கிட்டும்.

உங்கள் நட்சத்திரம் பூசம் 4-ஆம் பாதம், ராசி கடகம், லக்கனம் கன்னி.
நீங்கள் பிறந்த போது சனிமகாதசை கர்ப்பச் செல் நீக்கி எட்டு மாதங்கள். ஆயுளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆயுள் ஸ்தானாதிபதி லக்கனத்தில் இருப்பதால் ஆயுள் தீர்க்கம் என்று குறிப்பிடலாம்.
கலைக்கு காரனான சுக்கிரன் 4-ஆம் வீட்டில் இருக்கிறான். நடிப்புகாரகன் செவ்வாய் கேந்திரத்தில் இருக்கிறான். ஆகவே நீங்கள் துணிந்து நாடகம், திரைப்படம் போன்ற துறைகளில் உங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்த களம் இறங்கலாம்.

வீடு, இடம் வாங்கி விற்பது போன்ற தொழில் உங்களுக்கு லாபத்தை தரும். உணவகத் தொழிலும் லாபத்தைத் தரும். மொத்தத்தில் வார்த்தை ஜாலத்தால் நடக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றது.

கடந்த ஏழரை ஆண்டுகளாக ஏழரைச்சனியின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி இருக்கிறீர்கள். அதனால் கடன் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். அவை மெல்ல மெல்ல விலகும்.
மாதுரு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் நிற்பதால் தாயாருக்கு ஆரோக்கியக் குறைவு இருக்கும். இது போன்ற ஜாதக அமைப்பு கொண்ட பலர் தாயைப் பிரிந்தோ இழந்தோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உங்களுக்கு செவ்வாய் தோஷ அமைப்பு இருக்கிறது. செவ்வாய் லக்கனத்தில் இருப்பதோடு மட்டும் அல்லாமல் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதற்கு நீங்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்ற அமைப்புக்கொண்டவர்கள் ஏற்கனவே காதலில் வீழ்ந்து இருப்பார்கள். அதோடு தோல்வியும் கண்டிருப்பார்கள். உங்களைப் பொறுத்தவரை 30-க்கு மேல் திருமணம் நடந்தால் நல்லது..
சனிபகவானும் லக்கனத்தில் இருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமணத்தில் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

லக்கனாதிபதி சர ராசியில் இருந்து பாப கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டிருப்பது உங்களை ஒரு நிலையில் இருக்க விடாது. இதற்கு சதா சஞ்சார யோகம் என்று பெயர். அதனால் நாடோடி வாழ்க்கை அமைவதும் ஏற்ற இறக்கமான பொருளாதார சூழல் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.

6-ஆம் அதிபதி லக்கனத்தில் இருப்பது எத்தகைய எதிர்ப்பையும் தாண்டி வெற்றி கொள்ள வைக்கும். இப்போது உங்களுக்கு சுக்கிரமகா தசை நடக்கிறது. இதில் 2016- ஆம் ஆண்டு வரும் வியாழபுத்தியில் நீங்கள் நினைக்கின்ற லட்சியத்தை அடைவீர்கள். 2013-ஆம் ஆண்டில் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகளைக் கண்டறிவீர்கள்.


"நமக்குக் கீழே உள்ளவர் கோடி.... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்பது கவியரசர் கண்ணதாசனின் மெய்ஞான வரிகள்.... ஒரு காலத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். காலம் மாறும். கவலை தீரும். மனக்குழப்பத்தை அகற்றி விட்டு முன்னேற்றப்பாதைக்கு வழித்தடத்தை அமைக்க முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment