Monday, 28 December 2009

மாமியாரைக் காதலிக்கும் மருமகன்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி என்னை வந்து சந்தித்தார். அவருக்கு 35 வயது இருக்கும். இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பெண். இளையவன் ஆண். அவர்கள் வசிப்பது ஒரு அடுக்குமாடி வீடு.

கணவர் காலையில் ஆறு மணிக்கே வேலைக்கு போய் விடுவார். இவர் இல்லத்தரசியாக இருப்பதால் மீண்டும் படுக்கச் செல்வார். அப்படி படுத்து இருக்கும்போது யாரோ ஒருவர், இவர் பக்கத்தில் படுப்பது போலவும் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது போலவும் இருக்கிறது என என்னிடம் சொன்னார்.இது இவருடைய மனப்பிரமை என நினைத்து சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வந்தேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். இன்றும் எனக்கு அந்த சம்பவம் நடந்தது. அது உண்மையில் நடப்பது போலவே இருக்கிறது என்று சொன்னார்.

அப்போதும் அவருக்கு ஆறுதலான சில விஷயங்களைச் சொல்லி அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து வந்தார். குளிக்கும்போது என் உடம்பில் ஒரு பாம்பு வந்து சுற்றிக் கொள்கிறது. அது சில்மிஷமான காரியங்களைச் செய்கிறது என கூறினார்.

என்னடா இது சந்திரமுகி படம் போல இருக்கிறதே என நினைத்தேன். இனிமேலும் வெற்று வார்த்தைகள் பயனளிக்காது என எண்ணி என்னிடம் இருந்த அழகர்கோவில் தீர்த்தத்தைக் கொடுத்து வீடு முழுவதும் தெளிக்கச் சொன்னேன்.
அதற்கு பின்னர் அவர் வரவில்லை. அண்மையில் என்னைத் தேடி வந்தார். அவர் முகம் வெளிறிப் போய் இருந்தது. இப்போது இன்னொரு புதுக் கதை ஒன்றைச் சொன்னார்.

" என் மகளுக்கு 16 வயது ஆகிறது. ஒரு பையன் அவளைக் காதலிக்கிறான். அவன் முகத்தைப் பார்க்கும்போது நான் கனவில் பார்க்கும் பாம்பைப் போலவே இருக்கிறது. என்னுடைய கணவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. வீட்டிற்கு வரக்கூடாது என கண்டிப்பாக சொல்லி விட்டார்" என கூறினார்.

" இது நல்ல விஷயம்தானே... இதில் என்ன பிரச்சினை இருக்கிறது" என நான் சொன்னேன்.

" ஐயா... என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என் கணவர் இல்லாத நேரத்தில் நானே போன் செய்து வரச் சொல்கிறேன். என் மகளும் பள்ளிக்கூடத்துக்கு போய் விடுவாள். எனக்கும் அவனுக்கும் முன் ஜென்மத்தில் தொடர்பு இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்கள்" என கேட்டாள்.

அந்தப் பெண்ணின் பிறந்த நேரத்தை வாங்கிக் கொண்டு மறுநாள் வந்து பார்க்கும்படி அனுப்பி வைத்தேன். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால், நெஞ்சுக்குள் ஒரு நெருடல். இதையும் தாண்டி ஏதாவது இருக்கக்கூடுமா என என் உள்ளுணர்வு சொல்லியது.

மறுநாள் நான் சொன்ன நேரத்துக்கு வந்தாள். நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விட்டேன்.

" அம்மா... நீ அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிறாய். நான் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் முன் ஜென்மத் தொடர்பு பொருந்துகிறதா என பார்க்க முடியும்" என சொன்னேன்.

அவளுடைய முகத்தில் சின்னக் கலவரம். அதை நான் கவனிக்கத் தவறவில்லை. " சரி கேளுங்கள்" என சொன்னாள்.

"உன் மகளின் காதலன் உன்னைத் தொட்டிருக்கிறானா?'

" ஆம் ஐயா..."

" கட்டிப் பிடித்து இருக்கிறானா..."

கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

" என் கண்ணைப் பார்.... நான் சொல்வது சரியா என உன் மனதைக் கேள். ஒத்துக் கொள்வதாக இருந்தால் மேலே பேசலாம். இல்லை என்றால் நடையைக் கட்டு" எனக் கூறிவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன்

"அவன் உன்னைக் முதலில் கட்டிப் பிடித்தான்.அது உனக்கு கூச்சமாக இருந்தது. மகளின் காதலன் இப்படிச் செய்கிறானே என மனம் சஞ்சலப்பட்டது. நாளடைவில் உன் மனமும் உடலும் அதை ஏற்றுக் கொண்டது.

ஒரு நாள் சரியான சந்தர்ப்பத்தில் உன்னை அவன் படுக்கையில் பிடித்து தள்ளி விட்டான். முதலில் நீ முரண்டு பிடித்தாய். பின்னர் இணங்கி விட்டாய். இப்போது அடிக்கடி அந்த சுகம் கேட்கிறது.

மகளின் காதலனோடு இப்படி நடப்பது தவறு என உன்னுடைய அறிவு சொல்கிறது. ஆனால் பாழாய்ப் போன ஆசை அதை ஜெயித்து விடுகிறது. இப்போது உன் கணவரின் கண்டிப்பால் அவன் வீட்டிற்கு வர முடியவில்லை. அதே நேரத்தில் உன்னால் அந்த சுகத்தை அடையாமல் இருக்க முடியவில்லை. உன் மனமும் உடம்பும் கிடந்து தவிக்கிறது. இது சரியாக இருந்தால் அதற்கான ஆலோசனை சொல்கிறேன். இல்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்யலாம்" என சொன்னேன்.

அவளுடைய கண்களில் இருந்து பொல பொல வென கண்ணீர் கொட்டியது.

" நீங்கள் நேரில் பார்த்ததைப் போல் அப்படியே சொல்லி விட்டீர்கள். இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள் ஐயா" என அழுது கொண்டே கேட்டாள்.

என் நண்பர் ஒருவர் மன நல மருத்துவராக இருக்கிறார். அவரைப் போய் பார்க்கும்படி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறேன்.

இதைப் படித்தவுடன் 'அந்தப் பெண் இப்படி செய்யலாமா...' என கோபப்பட்டு விட வேண்டாம்.

அந்தச் சுகம் மட்டுமே பிரதானம் என எண்ணி இருந்தால் என்னைப் பார்க்க வந்திருக்க மாட்டாள். அதே வேளையில் அந்தப் பெண் செய்வதை நியாயப்படுத்துவதும் முட்டாள்தனம்.

அவளுடைய ஜாதகத்தைப் பார்த்தேன். அவளைத் தடம்மாறச் செய்கின்ற அளவுக்கு சில கிரகங்கள் கெட்டுப் போய் இருந்தன. அதை விளக்கிச் சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.

இந்த பதிவூட்டத்தைப் படிக்கும் ஆண்களும் பெண்களும் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். காலம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. கோளாறான பாலியல் பழக்கங்கள் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியாகின்றன.

நாக்கு ருசிக்காக பல உணவுக்கடைகளில் ஏறி இறங்குவதைப் போல உடல் ருசிக்காக நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத பல காரியங்களை இளைஞர்களும் யுவதிகளும் செய்கிறார்கள்.

 இது ஆரம்பத்தில் இன்பத்திலும் இன்பமாக இருக்கலாம். குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் தீர்க்க முடியாத துன்பத்தை கொண்டு வந்து விட்டு விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment