Monday, 28 December 2009

அண்ணன் என்னடா... தங்கை என்னடா... அறிவியல் வளர்ந்த உலகத்திலே.

சாலமன் அரசவைக்குத்தான் விசித்திரமான வழக்குகள் வருவது வழக்கமாம். அதுபோல என்னிடம் விசித்திரமான ஒரு பிரச்சினை வந்தது. ஒரு நாள் இரண்டு ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஒருவர் என்னிடம் வந்தார்.

"இவர்கள் என் பிள்ளைகள். இவர்களின் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மூத்தவன் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கிறான். இளையவள் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறாள்" என்றார்.
இருவரின் ஜாதகத்தையும் பார்த்தேன். பிறகு அந்தப் பெரியவரிடம் கேட்டேன். " சரி... இப்போது நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என தெளிவாக சொல்லுங்கள். அதற்கு சாத்தியம் இருக்கிறதா என பார்த்துச் சொல்கிறேன்" என கூறினேன்.

" இவர்கள் இரண்டு பேருமே கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். கேட்க மாட்டேன் என்கிறார்கள். இவர்களுக்கு திருமண யோகம் இருக்கிறதா" எனக் கேட்டார்.

திருமணத்திற்கு பாதகமான வகையில் எந்தக் கிரகமும் அமைந்திருக்கவில்லை. சுகஸ்தானமும் அயன சயன ஸ்தானமும் நன்றாக இருந்தன. காம வேட்கையை அதிகரிக்கும் வகையில் சில கிரகங்கள் வலிமை அடைந்திருந்தன. சந்நியாச யோகத்தைத் தருகின்ற வகையில் எந்தக் கிரகமும் இல்லை.

இது குறித்து இவரிடம் பேசி பயனில்லை. ஆகவே பிள்ளைகளை அழைத்து வர முடியுமா என அவரிடம் கேட்டேன். அழைத்து வருவதாக சொல்லி விட்டு சென்றவர் அடுத்த வாரத்தில் வந்தார்.

இருவரிடமும் பேசினேன். இருவருமே திருமணம் வேண்டாம் என சொன்னார்கள். அதே நேரத்தில் அவர்களிடம் ஆன்மீக நாட்டமோ பொதுச்சேவை ஆர்வமோ இல்லை என்பதும் தெரிந்தது. வேறு கோணத்தில் பேச்சைத் திருப்பினேன்.

அண்ணனை விட்டு விட்டு போக மாட்டேன். திருமணம் என்ற பெயரில் தங்கையைப் பிரிய மாட்டேன் என்பதுதான் இருவரின் இறுதிப் பதிலாக இருந்தது. இவர்களின் பாச உணர்ச்சி ஆரம்பத்தில் என்னை வியக்க வைத்தது. இருந்தாலும் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

பையனையும் அப்பாவையும் வெளியே இருக்கச் சொல்லி விட்டு பெண்ணிடம் சில கேள்விகள் கேட்டேன். எதிர்கால பாதிப்புகளை சரியான கோணத்தில் எடுத்துச் சொன்னால் ஆண்களை விட பெண்கள்தான் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தான் அவர்கள் கதை...

இவர்கள் இருவரும் சின்ன வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். இவருடைய தகப்பனார் பாசத்தைக் கொட்டி வளர்த்து படிக்க வைத்தார். தாயின் அன்பு கிடைக்காததால் அண்ணனும் தங்கையும் ஒருவருக்கொருவர் தாயாக மாறி அன்பைப் பொழிந்தனர்.

ஒரே தட்டில் சாப்பிட்டனர். ஒரே படுக்கையில் படுத்தனர். வயது ஆக ஆக பாலியல் மாற்றங்கள் உருவாகின. இருந்தாலும் இவர்கள் அன்பில் மாற்றம் இல்லை. தகப்பனாரும் பிள்ளைகளின் அன்பைக் கண்டு பூரிப்பில் இருந்தார்.

ஒரு நாள் குளித்து விட்டு அறைக்குள் ஆடை மாற்றிக் கொண்டு நின்றிருக்கிறாள் தங்கை. ஏதோ ஒரு சாமானை எடுக்க உள்ளே நுழைந்த அண்ணன் நிர்வாணக் கோலத்தில் நின்ற தங்கையைப் பார்த்திருக்கிறான். என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை அல்லவா.

பட்சம் வழக்கறியாது... நித்திரை சுகமறியாது..... பிச்சை தரமறியாது.... இச்சை முறையறியாது.... என்ற முன்னோரின் வாக்குப்படி காம வயப்பட்ட அண்ணன் ஒரு கணம் ஆடாமல் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அடுத்த கணம் புலி மாதிரி பாய்ந்து அவளை கட்டிப் பிடித்திருக்கிறான்.

எதிர்த்து போராட வேண்டிய தங்கை இணங்கிப் போனாள். இருவரும் படுக்கையில் சாய்ந்தனர். சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்தது. இது வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தொடர்ந்தது. திருமணம் செய்து கொண்டால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போக வேண்டும். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சட்டமும் சமுதாயமும் தடையாக நிற்கும்.

படித்தவர்கள் அல்லவா... இதைத் தீர்க்கமாக தெரிந்து கொண்டு திருமணத்தை மறுத்து வந்திருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை என்ற பெயரில் வேறு வேறு இடங்களில் வாழ்வதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இந்த உண்மையை என்னிடம் கூறிய போது அவள் பயமோ பதட்டமோ அடையவில்லை. மிக சாதாரணமாகவே பேசினாள். "இது என்னுடைய அப்பாவுக்கோ மற்றவர்களுக்கோ தெரியக்கூடாது. தெரிந்தால் என் அப்பா தாங்க மாட்டார். உங்களிடம் சொன்ன இந்த விஷயத்தை வெளியே சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டேன்" என்று சொல்லி என்னையும் அதிர வைத்து விட்டாள்.

இது குறித்து அவளிடம் எந்த அறிவுரையும் சொல்லவில்லை. அனைத்தையும் நன்றாக தெரிந்து கொண்டே இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீது எந்தக் கருத்தையும் திணிக்க முடியாது. அப்படிச் செய்தாலும் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

அவர்களுடைய தகப்பனாரை வரவழைத்து " இன்னும் சில ஆண்டுகளுக்குள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். அதுவரை அவசரப்பட வேண்டாம். பிள்ளைகள் போக்கிலேயே விட்டு விடுங்கள்" என சொல்லி அனுப்பி வைத்தேன்.

இப்படிச் சொல்லும்போது என் இதயத்தில் இனம் தெரியாத வலி.... நான் செய்தது சரியா... தவறா...என்னை நானே அலசிப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை.

1 comment:

  1. vitham vithamaai aatkalum ivvulakil irukkathaan seikiraarkal.... ellaam iraivan seyal

    ReplyDelete