Tuesday 6 October 2009

ஜோதிடம் வாழ்க்கை அல்ல... வழிகாட்டி

ஜோதிடமா... அதெல்லாம் உல்டா என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். ஜோதிடத்தையே உயிர் மூச்சாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் தலைசிறந்த அறிவாளிகள் என போற்றப்படுபவர்கள் இஸ்ரேலியர்கள். அவர்களுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும். அந்த நாட்டில் மட்டும் தான் 12 ராசிகளின் படம் போட்டு தபால் தலை வெளியிட்டிருக்கிறார்கள்.







அப்படி என்றால் அவர்கள் எந்த அளவுக்கு ஜோதிடத்தை நம்புகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மாவீரன் அலெக்ஸாண்டரில் இருந்து அமெரிக்காவின் முதல் குடிமகன் வாஷிங்டன் வரை ஜோதிடத்தில் அபார நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்கள் என்பது பல ஆய்வுகள் மூலமாக தெரியவந்திருக்கிறது.


பெரிய பெரிய தொழில் அதிபர்கள் ஜோதிடத்தை நம்புகிறார்கள். அரசியல்வாதிகள், நடிகர்கள் ஜோதிடத்தை நம்புகிறார்கள். மூட நம்பிக்கையை ஒழிக்கிறோம் என முழக்கமிட்டு களம் இறங்கி வலம் வந்தவர்கள்கூட யாகம்...பூஜை என அமர்க்களப்படுத்துகிறார்கள்.


ஆனால், ஏனோ தெரியவில்லை சிலர் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜோதிடம் என்பது வாழ்க்கை அல்ல...வழிகாட்டி... இதை உணர்ந்து நடந்தால் வரும் துன்பங்களைத் தடுக்க முடியாவிட்டாலும் விலகிச் செல்லலாம்.


எப்படி விலகிச் செல்வது என்பதை உங்களுக்கு புரியும் வகையில் வரும் காலங்களில் வகைப்படுத்துகிறேன்.

1 comment:

  1. millionaires don't believe astrology..but billionaires do :) ன்னு சொல்லுவாங்க. எதிர்காலம் வெச்சுருக்குற சஸ்பென்ஸ தெரிஞ்சுக்குறத்துக்கான ஆர்வம் தான்

    ReplyDelete