Wednesday, 7 October 2009

புதன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் படிப்பு சிறப்பாக வரும்

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். ஒரு பெண், தன்னுடைய மகன் படிப்பைப் பற்றி என்னிடம் கேட்க வந்தார்.

ஜாதகத்தை பார்த்தேன். வித்தியாகரனான புதன் ஆட்சி உச்சம் பெற்று சூரியனோடு இருந்தார். கர்ம தர்ம ஸ்தானாதிபதி சனி. அவரும் நல்ல இடத்தில் இருந்தார். குரு பார்வை பெற்றிருந்தார்.
நான் அந்தப் பெண்ணைப் பார்த்து " படிப்பு சிறப்பாக வருமே பையனுக்கு " என்றேன்.

"எங்கே சாமி படிக்கிறான். பிளஸ் டூ வில் பெயிலாகி விட்டான். ராங்கியத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றார்.

ஜாதக அமைப்போ மிக நன்றாக இருக்கிறது. ஆனால், அந்த பெண்ணோ சரியாக படிக்க மாட்டான் என்று சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். மிதுனராசி அந்தப் பையனுக்கு. ஏழரைச் சனி இடைஞ்சல் செய்திருக்கலாம் என்று நினைத்தேன்.

இறுதியாக " அம்மா... உங்கள் பையன் படிப்பில் வெற்றி பெற்று உயர்ந்த நிலைக்கு வருவான்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று சொல்லி அனுப்பினேன்.

ஆனால், மனதுக்குள் குறுகுறுப்பு. இந்த ஜாதக அமைப்புப்படி அவன் பொறியியலாளராக வர வேண்டும். ஆனால், படிப்பு வரவில்லை என்று அந்தப் பெண் சொல்கிறார். கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

கடந்த மாதம் அந்தப் பெண் என்னைத் தேடி வந்தார். ஒரு தட்டில் தேங்காய், பழம், வெத்திலை, பாக்கு அதோடு அவரால் முடிந்த காணிக்கையையும் வைத்து என்னிடம் கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் தெரியாமல் திகைத்தேன்.

"ஐயா, என்னுடைய மகன் பாலிடெக்னிக்கில் நல்ல மார்க் எடுத்திருந்தான். இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்றான். அவனுடைய அப்பாவும் நானும் எப்படி முடியும் என்று கவலைப்பட்டோ ம். அவன் எடுத்திருந்தது சிவில் இஞ்சினியரிங்.
கற்பகம் காலேஜ் என்பது கோயம்புத்தூரில் உள்ள பிரபலமான இஞ்சியனியரிங் காலேஜ். இடம் கிடைப்பதே சிரமம். அதிலும் இவன் பாலிடெக்னிக் படித்தவன். எங்களுக்கு பெரிய பணவசதி கிடையாது. என் தம்பி வேலை பார்க்கும் கடை முதலாளி என் பையனை அந்தக் காலேஜில் டொனேஷன் இல்லாமல் சேர்த்து விட்டார்.
இப்பொழுது அவன் சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறான் ஐயா..."

இப்படிச் சொல்லும்போது அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கின. என்னுடைய கணிப்பு சரியாக இருந்த சந்தோஷம் எனக்கு. சில நேரங்களில் ஜாதக கட்டத்தையும் தாண்டி சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு. அவற்றை பின்னர் பார்ப்போம்.

4 comments:

  1. i need to ask some question how can i connatct you?

    ReplyDelete
  2. அன்பரே !
    தங்கள் வலைப்பூ கண்டு மகிழ்ந்தேன். நல்ல முயற்சி. ஏற்கெனவே ஜோதிடத்தை கிண்டலடிப்பவர்கள் நிறையவே உள்ளனர். இந்த பதிவில் புதன் ,புதன் என்று ஜெபமே செய்துள்ளீர்கள். புதன் வித்யாகாரகன் என்பது உண்மைதான்,ஆனால் அது ப்ரிலிமினரி என்பது தங்களுக்கே தெரியும். இத் போன்ற ஆரம்ப கட்ட கருத்துக்களை ஹை லைட் செய்ய வேண்டாம். மேலும் உதாரண ஜாதகங்களை விவரிக்கும் போது ஜாதக கட்டத்தையே கொடுப்பது நல்லது. இது என் கருத்து மட்டுமே. ஏற்பதும் ஏற்காததும் தங்கள் விருப்பம்

    ReplyDelete